பாத்துகோங்க…! அவ்ளோ தான் சொல்ல முடியும்…’ ‘அவங்க பாதுகாப்புக்கு நீங்க தான் பொறுப்பு…’ – நியுசிலாந்து பிரதமர் கருத்து…!

மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கும் நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் வெளிநாட்டு வீரர்களின் நடைமுறையை மாற்றியுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

foreign players in the IPL 2021 series as the corona

சென்ற வருடமே கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரை யூ.ஏ.இ-யில் நடத்தி முடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் இந்தியாவின் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 இடங்களில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

தற்போது மும்பையில் கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், இடத்தை மாற்றும் முடிவு எடுக்கப்படாது என்றும் பாதுகாப்பான வகையில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவின் ஐபில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற 8 நியூசிலாந்து வீரர்களின் பாதுகாப்புக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்றும் ஜெசிண்டா கூறியுள்ளார்.

கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கைல் ஜாமீசன், ஜிம்மி நீசம், டிம் செய்பர்ட், ஆடம் மில்னே மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய 8 நியூசிலாந்து வீரர்கள் இந்திய ஐபிஎல் 2021 தொடரில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்களே நினைத்தாலும் இந்தியாவில் இருந்து நியுசிலாந்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Contact Us