மணிவண்ணனுக்காக களமிறங்கிய அமெரிக்கா; நேற்று நடந்தது என்ன?

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

மணிவண்ணனின் கைது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும்” என்று பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யபட்டார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மேயரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us