டக்ளஸ்சின் நாடகம் அம்பலமானது; என்ன நடிப்புடா சாமி; அப்ப நேற்று காலையிலேயே சொல்லியிருக்க வேண்டியதுதானே!

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பான செயலை, அறியாத் தவறாக கருதி முதல்வர் வி. மணிவண்ணனை விடுவித்து மாநகர சபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவண செய்யுமாறு இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

குறித்த பகிர்வில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நகரின் சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று இரவு யாழ். பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த மணிவண்ணன் – இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்விடயம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் யாழ் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us