இரகசியத் தகவலுக்கமைய தேடுதல்; கட்டிலுக்குக்கீழ் காத்திருந்த அதிர்ச்சி; அதிர்ந்துபோன பொலிஸார்!

புத்தளம் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது அறிய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாலேயே மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ளார் எனவும், அத்துடன் உயிரிழந்த மனைவியின் சடலத்தை சாக்குப்பை ஒன்றில் வைத்து கட்டிலுக்கு கீழ் மறைத்து வைத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கட்டிலுக்கு கீழ் இருந்த சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us