இறக்க முன்னர் பிலிப் சொன்ன வார்த்தை- மகாராணியை பத்திரமா பார்த்துக் கொள்- குடும்பத்தை கொண்டு நடத்து !

கடந்த 28 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் இருந்து, வீடு விரும்பிய மகாராணியாரின் கணவர் பிலிப் 9ம் திகதி காலை 9 மணிக்கு இறந்தார். அவருக்கு 99 வயது, இந்த வருடத்தில் 99 வது நாளில் இறந்துள்ளார் என்பது மிகவும் ஆச்சரியமான விடையம். அனைத்துமே இலக்கம் 9 தோடு சம்பந்தப்பட்டது என்பது ஒருபுறம் இருக்க.

அவருக்கு தான் இறக்கப் போகிறேன் என்பது மிக நன்றாக தெரியும். கடைசி நாட்களை வைத்தியசாலையில் செலவு செய்ய அவர் விரும்பவில்லை. வீட்டில் இருக்கவே ஆசைப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தனது மகன் சார்ளசை அழைத்து. தனது மனைவியும் மகாராணியுமான எலிசபெத்தை நன்றாக பார்த்துக் கொள். இந்த குடும்பத்தை கொண்டு நடத்து. என்று கூறியுள்ளார். இதுவே பிலிப் கூறிய கடைசி வார்த்தைகள் என்று கூறப்படுகிறது.

Contact Us