ரஷ்யாவின் அதி நவீன றோபோட்- டாங்க்களை களம் இறக்கியது ரஷ்யா- யூக்கிரேனில் சண்டை வரும் நிலை ?

ரஷ்யா யூக்கிரேன் நாட்டு எல்லையில் தனது பெரும் படைகளை நிலை நிறுத்தி வரும் அதேவேளை, ஆளில்லாத றோபோ டாங்கிகளையும் அங்கே குவித்து வருவது பெரும் பதற்றத்தை தோற்றுவித்து வருகிறது. எதிரி நாட்டு விமானத்தை வானில் வைத்தே சுட்டு வீழ்த்த வல்ல ஏவுகணைகள். பிற டாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் ராணுவத்தை தாக்க வல்ல அதி சக்த்திவாய்ந்த துப்பாக்கிகள் என்று பலதரப்பட்ட ஆயுதங்கள் இந்த றோபோ டாங்கிகளில் உள்ளது.  வீடியோ இணைப்பு(கீழே) 

இதனை ரஷ்யா எல்லைக்கு நகர்த்தியுள்ள விடையம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. தனக்கு எதிரி என்று கருதும் பட்சத்தில் அவை தன்னிச்சையாக செயல்பட்டு தாக்க வல்லவை. தற்போது அவை சாதாரணமான நிலையில் உள்ளது. அதற்கு போர் என்ற கட்டளையை பிறப்பித்தால் போதும். உடனே தாக்குதல் நிலைக்கு அது மாறிவிடும். பின்னர் ஆபத்து தான்.

Contact Us