தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திடீரென உயிரிழப்பு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் காலமானார்.

Srivilliputhur constituency Congress candidate Madhavrao passed away

Srivilliputhur constituency Congress candidate Madhavrao passed away

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக பி.எஸ்.டபிள்யூ மாதவராவ் போட்டியிட்டார். இவர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று (11.04.2021) உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Srivilliputhur constituency Congress candidate Madhavrao passed away

எம்பிஏ முதுநிலை பட்டதாரியான மாதவராவ், கடந்த 1986-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தார். இதனை அடுத்து 1987-ம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். மாதவராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாதவராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us