இலங்கையில் மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்று விசித்திரமாக பாடம் கற்பிக்க முயற்சித்த ஆசிரியர் சிக்கினார்!

பிரசித்தமான பாடசாலையொன்றின் அறைக்குள், 14 வயதான மாணவியின் உடலை தொட்டு, அம்மாணவிக்கு முத்தம் கொடுப்பதற்கு முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாலிம்பட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறையொன்றில் இருக்கும் புத்தகத்தை எடுத்துவருமாறு அவ்வாசிரியர், மாணவிக்கு பணித்துள்ளார். அந்த மாணவியும் புத்தகத்தை எடுப்பதற்காக, அவ்வறைக்குச் சென்றுள்ளார். எனினும், மாணவியின் பின்னாலேயே சென்ற அவ்வாசிரியர், மாணவியை கட்டிப்பிடித்து, இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவருடைய பிடிக்குள் சிக்கிக்கொள்ளாது, தப்பியோடிய மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us