பல நாள் கள்ளன் ஒருநாள் சிக்குவான் என்பதுபோல் ஒன்றரை வருட திருடர்கள் யாழில் சிக்கினார்கள்!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புல்லுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை, தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us