இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; இந்த மாணவனுக்கு நடந்தது என்ன?

மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மெதிரிகிரிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தமித் இந்துசர என் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தில் ட்ரக்டர் வாகனமொன்றை கழுவிக் கொண்டிருந்த போது இன்று (11) மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Contact Us