24 மணி நேரத்தில் வெறும் 7 பேர் இறப்பு: 1,730 பேருக்கு கொரோனா தொற்று பிரிட்டனில்

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில். 1,730 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றியுள்ளது என சுகாதார துறை அறிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் இருந்து பல நூறு பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில். வைத்தியசாலைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 3வது அலை தொடங்கும் என்றும். அதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அரசு கருதிய போதும். தற்போது கூட 3ம் அலை அடிக்க வில்லை. மேலும் சொல்லப் போனால் நாளை முதல், முடி வெட்டும் நிலையம் முதல் கொண்டு, மதுபானசாலைகள் வரை பல கடைகள் திறக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us