சீமான் மீது பெரும் கொலை வெறித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது- மக்கள் பெரும் பதற்றம் !

தமிழ் உணர்வாளர் செந்தமிழன் சீமான் மீது கொலை முயற்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக, அவரது ஊடகம் தெரிவித்துள்ளது. பரப்புரைக்காக அவரும், இயக்குணர் பாரதி ராஜவும் சென்றவேளை. அண்ணன் சீமானை மேடையில் இருந்து கீழே இழுத்து விழுத்தி கொலை செய்ய் பெரும் கும்பல் ஒன்று முயற்ச்சி செய்ததாகவும். அதனை சீமான் அவர்களும் காவலாளிகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது இவ்வாறு இருக்க , சீமானுடன் கை குலுக்கவே முற்பட்டேன் என்று ஒரு இளைஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தன்னை காவலாளிகள் பிடித்துச் சென்றுவிட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனை மத்திய சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்பதோடு, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Contact Us