சாவகாசமாக இறங்கி பொலிசாரை மண்டையில் போட்ட கடத்தல் மன்னன் – AR-15 ரக ரைபிள்

படு வேகமாக காரை ஓட்டிச் சென்ற ஒமர் பீலிஃக்ஸ் என்ற 39 வயது கடத்தல் மன்னனை, பொலிசார் தற்செயலாக மறித்துள்ளார்கள். ஜெரட் என்ற பொலிஸ் அதிகாரிக்கு இன் நபர் எப்படிப்பட்ட கிரிமினல் என்பது தெரியாது. இதன் காரணத்தால் குறித்த பொலிஸ் அதிகாரி எந்த ஒரு முன் எச்சரிக்கையும் இன்று காருக்கு அருகே சென்றவேளை. ஏ.ஆர் 15 ரக ரைபிளை எடுத்து மறைத்துக் கொண்டு வெளியே இறங்கிய ஓமர். 3 பிள்ளைகளின் அப்பாவான அந்த பொலிஸ் அதிகாரியை நோக்கி சுட்டுள்ளார். கீழே வீடியோ இணைப்பு

அத்தோடு அவர் கீழே வீழ்ந்த பின்னர் கூட, அருகில் சென்று மேலும் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றவேளை. சுமார் 40 மைல் தூரம் வரை பொலிசார் அவரை துரத்தி மடக்கிப் பிடிக்க முனைந்தவேளை. அவர் மீண்டும் ரைபிளை எடுத்துள்ளார். இதனால் பொலிசார் சுட்டதில் ஓமர் பலியாகியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது மிகவும் மலிந்து விட்டது. ஓமர் என்னும் இந்த போதை பொருள் கடத்தல் மன்னன், ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் என்றும் மேலும் அறியப்படுகிறது.

Contact Us