ஆட்டிலறி ஷெல் தாக்குதலை ஆரம்பித்த ரஷ்யா: யூக்கிரேன் ராணுவ வீரர் பலி- ஆரம்பிக்கும் போர் !

சற்று முன்னர் யூக்கிரேன் எல்லையில் உள்ள ரஷ்ய துருப்புகள், ஆட்டிலறி ஷெல் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இவை யூக்கிரேன் நாட்டினுள் சென்று வெடிக்க ஆரம்பித்துள்ள நிலையில். இன்று இந்த தாக்குதல் காரணமாக ஒரு யூக்கிரேன் ராணுவ வீரர் பலியாகியுள்ளார். பதிலுக்கு யூக்கிரேன் வீரர்கள் துப்பாக்கிகளால் ரஷ்ய படைகளை நோக்கிச் சுட்டுள்ளார்கள். இது இவ்வாறு இருக்க மேலதிக படைகளை ரஷ்யா இன்றும் எல்லைக்கு நகர்த்தியுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில், யூக்கிரேனை சண்டைக்கு இழுத்து. அதனூடாக டொம்பாஸ் மாகாணத்தை கைப்பற்றும் திட்டத்தில் தான் ரஷ்யா இருக்கிறது என்பது தெளிவாக புலப்படுகிறது. இதனை யூக்கிரேன் கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Video Link : https://edition.cnn.com/2021/04/12/europe/ukraine-zelensky-front-lines/index.html

Contact Us