காச வச்சிட்டு தாராளமா நடையை கட்டுங்க’… ‘கறாராக நிற்கும் எகிப்து’… ஆட்டம் காண வைத்துள்ள தொகை!

தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை ஒரு இன்ச் கூட நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.

Ever Given ship forbidden to leave the Suez Canal until its owners pay

Ever Given ship forbidden to leave the Suez Canal until its owners pay

இறுதியில் கப்பலை மீட்டு மீண்டும் மிதக்கச் செய்தது. இருப்பினும் இழப்பீடு வேண்டும் என சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டு வந்தது. கப்பலை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கான செலவுகள், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், மணலை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள், இழுவை படகுகளுக்கான செலவுகள், வணிக ரீதியிலான நஷ்டம் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக பில் போட்டுள்ளது சூயஸ் நிர்வாகம்.

Ever Given ship forbidden to leave the Suez Canal until its owners pay

அதன்படி  உத்தேசமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது. இதனை சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒசாமா ரபீ உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் கால்வாய் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது. கப்பல் எப்படி தரை தட்டியது என்ற விசாரணை முடியும் வரையிலும், தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை ஒரு இன்ச் கூட நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.

Contact Us