அசுரன் படமெல்லாம் ஒண்ணுமே இல்ல, இந்த படம் அதை விட 10 மடங்கு இருக்கும்.. ரசிகர்களை உசுப்பிவிட்ட தயாரிப்பாளர்

கர்ணன் படம் வெளியான பிறகு தனுஷ் நடிப்பில் சிறந்த படம் அசுரனா? அல்லது கர்ணனா? என்ற வாதம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் இரண்டுமே வெவ்வேறு கதை களம் கொண்ட திரைப்படங்கள்.

இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஒன்றுடனொன்று ஒப்பிட்டுப் பார்ப்பது சகஜம் தானே. சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படம் தனுஷ் இன்னொரு தேசிய விருதை வாங்கிக் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஏற்கனவே தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகளை வாங்கிக் கொடுத்தவர் தான் வெற்றிமாறன். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் அசுரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் விருதுகள் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி வெற்றியை பெற்றது. மேலும் இந்த இரண்டு படங்களையும் தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு.

 

Contact Us