முதன் முதல் விண்வெளி சென்ற யூரி ககாரின்: அன்று என்ன நடந்தது என்று தெரியுமா ?

டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும் ஒரு பயணியாகவே அவரால் உணர முடிந்தது.

யூரி ககாரினுக்கு தான் பயணித்த விண்கலத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை. கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர் தெரிவித்த தகவலின்படி, விண்கலத்தின் ஜன்னலிலிருந்து அவர் பூமியின் அழகை கண்டார். பூமியில் மேகங்களின் நிழல் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை உருவாக்கி இருந்தது.

ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு தேதியன்று யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார். இது விண்வெளித்துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் அமெரிக்காவுடனான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாகும். அவர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, இந்த வெற்றியை மறுக்க முடியாததாக மாற்றியது.

ககாரின், மிகுந்த துணிச்சலுடன், வரலாற்றை உருவாக்க ஒரு ஆபத்தான சவாலை ஏற்றுக்கொண்டார். விண்வெளி பயணம் குறித்து மனிதகுலத்துக்கு மிக குறைந்த அளவே புரிதல் இருந்த காலக்கட்டத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

கூடுதலான தகவல் என்னவென்றால், ககாரின் பயணித்த விண்கலத்தில் பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், அவரது உயிரை காப்பாற்றக்கூடிய எவ்வித அவசர மீட்பு அமைப்பும் அப்போது இருக்கவில்லை. ககாரினை சுமந்துச் சென்ற ஏவூர்தி (ராக்கெட்) அதற்கு முன்பு பல முறை, சோதனைகளின்போது தோல்வியடைந்துள்ளது. இதுபோன்ற ஆபத்து நிறைந்த பயணத்தில் அவரை ஈடுபடுத்தியபோது, பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதாவது, மனிதர்கள் விண்வெளியில் வாழ முடியுமா? ஒரு விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கே பயணிக்க முடியுமா? விண்கலம் பூமியுடன் தொடர்பில் இருக்குமா? விண்கலம் பாதுகாப்பாக திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு யூரி ககாரினின் இந்த பயணம் பதிலளித்தது.

ஏனெனில், அந்த காலக்கட்டத்தில் ஏவூர்தி, விண்கலம், தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை. மனிதர்களால் விண்வெளியில் வாழ முடியுமா என்பது குறித்து நேரடியான பதில்களும் அப்போதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Contact Us