வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்,பார்சல்களை டெலிவரி செய்யும் ரோபோக்கள் இது தான் இனி உலகம் !

சிங்கப்பூரில் மளிகைப்பொருட்கள் மற்றும் பார்சல்களை வழங்க இரண்டு ரோபோக்கள் வீடு தேடி வருகின்றன. ஒட்சா என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோக்களுக்கு “கெமல்லோ” என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனைக்காக 1 வருட காலத்திற்கு சுமார் 700 வீடுகளுக்கு தற்போது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி ஆகும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் உடனனுக்குடன் ஆப் மூலமாக அறிவுறுத்தப்படும். ஒரு ரோபோவால் அதிகபட்சம் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Contact Us