என்னா நடிப்பு.. மிரண்டு போய்ட்டேன்’!.. ‘வீடியோ காலில் பேச வைத்த நட்டு’.. யோகி பாபுவை புகழ்ந்து தள்ளிய ‘கிரிக்கெட்’ வீரர்கள்..!

நடிகர் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்தை கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டது கவனம் பெற்று வருகிறது.

Cricket players praises Mandela movie and actor Yogi Babu

Cricket players praises Mandela movie and actor Yogi Babu

இந்த நிலையில் மண்டேலா திரைப்படம் குறித்து ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடும் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்னர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை பார்த்தேன். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பைக் கண்டு மிரண்டு விட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு, என்னா நடிகர்… என்னா கதை.. நண்பர் நடராஜன் மூலம் வீடியோ கால் வழியாக யோகி பாபுவிடம் பேசினேன்’ என ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தும் மண்டேலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘வாவ் மச்சான். இதை உன்னிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்ல. இந்தப் படத்தை நேற்று இரவுதான் பார்த்தேன். உண்மையில் படம் பிரமாதம். நிச்சயமாக இந்தப்படம் நிறைய விருதுகளை வெல்லும்’ என அபினப் முகுந்த் பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us