காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முறைமாமனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

24 வயதான முனீஸ்வரன் தான் காதலுக்கு தடையாக இருந்த முறைமாமனின் நண்பரை வெட்டி படுகொலை செய்துள்ளார். ஒன்பது பேர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் மாலை பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான கணேசன், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி துணை தலைவராக இருந்து வருகிறார். கணேசனின் 17 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த உறவினரும் முறை மாமனுமான முனீஸ்வரன் காதலித்து வந்துள்ளார். முனீஸ்வரன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதால் தந்தை கணேசன், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரும் பால் வியாபாரியுமான முருகேசனிடம் ஆலோசனை தந்தை கணேசன் கேட்டுள்ளார். முருகேசனும் முனீஸ்வரனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, காதலியுடன் பேசுவதற்கு தடையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் முருகேசன் தன்னைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டதாக முனீஸ்வரன் தவறாக நினைத்துள்ளார். தான் முந்திக் கொண்டு முருகேசனைத் தீர்த்துக் கட்டி விட வேண்டும் என முடிவும் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை பால் வியாபாரத்திற்காக மாலைபட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதி அருகே முருகேசன் வந்துள்ளார்.

அப்போது அவரை முனீஸ்வரன் தலைமையில் சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுக்கா போலீசார் தலைமறைவாக இருந்த முனீஸ்வரனை கைது செய்தனர்.

Contact Us