நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு இப்படியொரு ஆபத்தா? பாவம் சேர் அவரு..

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் செந்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், கடந்த சில நாட்களாக காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்னும் மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us