ஆன்லைன் ஆர்டரா’?… ‘இனிமேல் டெலிவரிய நாங்க பாத்துக்குறோம்’… அசத்தலாக களமிறங்கியுள்ள ரோபோக்கள்!

சிங்கப்பூரில் டெலிவரி செய்யும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Singapore company deploys robots to deliver groceries

ஒவ்வொரு நாளும் அறிவியலில் புது புது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதேபோன்று மக்களின் விருப்பமும் மாறிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிய காலம் மாறி, தற்போது இணையத்திலேயே ஆர்டர் செய்து, அந்த பொருள் ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வீட்டிற்கே வரும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் புது முயற்சியாக டெலிவரி பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கேமெல்லோ எனப் பெயரிடப்பட்ட இரண்டு ரோபோக்கள் வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களில் இரு அறைகள் உண்டு.

Singapore company deploys robots to deliver groceries

இவை 20 கிலோ வரையிலான பொருள்களை எந்தவித சேதமும் இன்றி கொண்டு சேர்க்கும் திறன் பெற்றவை. 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்குப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பணியைச் சோதனை அடிப்படையில் செய்து வருகின்றன. விரைவில் இச்சேவைப் பலபகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த ரோபோக்களை வடிவமைத்த நிறுவனமான OTSAW.

முற்றிலும் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருந்த பொருள்கள் வைக்கப்பட்டவுடன், இவை குடியிருப்பை நோக்கி வரும் பாதை, பொருள்களை எடுத்து சென்று வழங்கும் இடம் போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்படும். வார நாள்களில் தினமும் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் அரை நாளும் இந்த ரோபோக்கள் பணி செய்கின்றன.

Singapore company deploys robots to deliver groceries

கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற பொருள்கள் விநியோகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாக ரோபோக்களை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Contact Us