உங்களோட ‘ஃகிப்ட்’க்கு நன்றி ‘சாம்சன்’..” ‘மோகன்லால்’ போட்ட ‘ட்வீட்’.. மெய் சிலிர்த்து போன ராஜஸ்தான் ‘கேப்டன்’!!

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, கடந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) செயல்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, அவரை ராஜஸ்தான் அணி விடுவித்திருந்தது.

Mohanlal receives jersey from sanju samson and he responds

222 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் தனியாளாக நின்று போராடினார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் சதமடித்து அசத்தினாலும், மிக அருகே வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால், ராஜஸ்தான் அணி வீரர்கள் வருத்தமடைந்தனர். குறிப்பாக, வெற்றிக்கு அருகே வந்து தோற்றதால், சஞ்சு சாம்சனும் அதிகம் ஏமாற்றமடைந்திருப்பார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனைப் பாராட்டி, பிரபலம் ஒருவர் ட்வீட் செய்ததால், தோல்வியின் வேதனையில் இருந்து சற்று ஆறுதல் அடைந்துள்ளார் சஞ்சு சாம்சன். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohanlal), தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டியர் சஞ்சு சாம்சன், நீங்கள் அனுப்பிய ஜெர்சிக்கு நன்றி. உங்களது தலைமையில் ஆடும் ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் அதிக வெற்றிகளை பெறட்டும். உங்களது அணிக்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், ‘இந்த சீசனில் நீங்கள் பிங்க் நிற ஜெர்சி அணிந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது லெஜண்ட்’ என கமெண்ட் செய்தது. அதே போல, சஞ்சு சாம்சனும், மோகன்லாலின் ட்வீட்டைப் பகிர்ந்து, ‘தேங்க் யூ லாலேட்டா’ என குறிப்பிட்டுள்ளார்.

 

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனை பாராட்டி, நடிகர் மோகன்லால் செய்துள்ள ட்வீட்டும், பதிலுக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சனின் பதிவும், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Contact Us