திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார்: பிரிட்டன் இளவரசர் ஹாரியைக் கைது செய்யவேண்டும்; பெண் தொடர்ந்த வழக்கால் அதிர்ந்த உயர் நீதிமன்றம்!

சமூகத்தில் திரைத்துறை, விளையாட்டுத்துறை, அரசியலில் பிரபலமாக இருப்பவர்களைத் திருமணம் செய்யவேண்டும் என்று சிலர் அதீத எல்லைக்க்கு செல்லும் நிகழ்வுகளை நாம் அவ்வப்போது பார்த்துள்ளாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ராகுல் காந்தி என் கனவில் வந்தார். அவரைத் தான் நான் திருமணம் செய்வேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதனை மிஞ்சிய ஒரு சம்பவம் ஹரியானாவில் நடைபெற்றுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பல்விந்தர் சிங் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ‘பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியை கைது செய்யவேண்டும். அவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில் அவரே அவருக்காக வாதாடினார். அந்தப் பெண்ணின் சிறப்பு வேண்டுகோளை ஏற்று காணொளி விசாரணையாக இல்லாமல் நீதிமன்றத்துக்கு நேராக வந்து விசாரணையில் ஈடுபட்டனர் நீதிபதிகள்.

வழக்குத் தொடர்ந்த பல்விந்தர் சிங், ‘ஆவணமாக ஹாரி அனுப்பியதாக சில ஈ-மெயில் குறிப்புகளையும் சமர்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, பல்விந்தர் சிங், இங்கிலாந்து சென்றுள்ளாரா என்று நீதிபதிகள் கேள்விஎழுப்பினர். இதுவரை சென்றதில்லை என்று பல்விந்தர் சிங் பதிலளித்துள்ளார். எல்லா பேச்சுகளும் சமூக வலைதளங்கள் மூலமே நடைபெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளார். அதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘போலி கணக்கு தொடங்கியவர்களிடம் பல்விந்தர் சிங் ஏமாந்துள்ளார் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

Contact Us