நேரடியாக அழைத்து எச்சரித்த பைடன்: திரும்பி போங்கள் இல்லையென்றால் என்று மிரட்டிய புட்டின் !

யூக்கிரேன் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, ரஷ்யா உடனடியாக பின் வாங்கவேண்டும் என்று பைடன் நேரடியாக புட்டினிடம் தெரிவித்துள்ளார். இன்று அவசரமாக புட்டினோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன். ரஷ்யா உடனடியாக குறித்த இடத்தில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்கா அனுப்பியுள்ள 2 போர் கப்பல்களையும் பின்வாங்கச் சொல்லி, புட்டின் கூறியுள்ளதோடு…

அமெரிக்கா பின்வாங்க மறுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார் என ருயிட்டர்ஸ் செய்திச் சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளது. யூக்கிரேன் நாட்டிற்கு ஆதரவாக முழு அளவில் ஐரோப்பிய நாடுகள் உதவ உள்ளது. இன் நிலையில் அமெரிக்கா தனது அதி நவீன 2 போர் கப்பலை கருங்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதனால் ரஷ்யா கடும் அதிருப்த்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிய குழப்பம் ஏற்பட்டால் கூட பெரும் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. Source:  Biden tells Putin to back down over Ukraine: US President personally phones Russian leader to ‘de-escalate tensions’ after Moscow told America to keep warships away ‘for their own good’

Contact Us