யாழ்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு காசால் தான் தான் பிரச்சனை- சர்வேந்திர சில்வா கூறுகிறார் பாருங்கள் !

யாழ்ப்பாணத்தில் வாழும் வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று(13) விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி, பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம்

அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் இந்த வீடானது இன்று கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் வீட்டை மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப்பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கியுள்ளதோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார். அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம்.

இலங்கை இராணுவம் ஒரு மனிதாபிமான இராணுவம். அதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி, இராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் இந்த இராணுவம் கொடுமையானது, இராணுவம் இங்கே தேவையற்றது என கூறிவருகின்றனர். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினர் தமிழ்மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். சமீப காலமாக இலங்கை ராணுவம் வெளிநாட்டில் இருந்து, யாழ்பாணத்திற்கு கிடைக்கும் உதவிகளை தடை செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் இருந்து பணம் கிடைப்பதனால் தமிழர்கள், இலங்கை ராணுவத்திற்கு எதிராக வேலை செய்வதாக இலங்கை ராணுவம் நம்புகிறது. இதனை ஒட்டு மொத்தமாக நிறுத்த இலங்கை ராணுவம் தற்போது பலரை கைது செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us