ரொம்ப சிம்பிள்…! ‘எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ…’ உங்களுக்கு ‘அது’ இருக்கா இல்லையான்னு… ‘அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்…’ – எப்படிங்க இது சாத்தியம்…?

மீண்டும் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கண்டறிய ஜெர்மன் நாடு ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.

German discovered a new technology to detect the corona

அதாவது இனி கொரோனா வைரஸ் இருக்குறதா இல்லையா என்பதை போனிலேயே கண்டுபிடிக்கலாம்.

ஜெர்மன் நிறுவனமான செமிக் ஆர் எப் ( Semic RF) என்ற நிறுவனம், கொரோனா வைரஸை கண்டுபிடிக்க செமிக் ஐ ஸ்கேன் (Semic EyeScan) என்ற, செயலியை உருவாக்கி உள்ளது.

இந்த செமிக் ஐ ஸ்கேன் செயலியை நம்முடைய ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து, நமது கேமிராவில் புகைப்படம் எடுத்தால், சமந்தப்பட்டவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை இதுவே கண்டறிந்துச் சொல்லுமாம்.

அதாவது, கொரோனா பாதித்த நபர்களுக்கு முக்கிய அறிகுறியாக கண்கள் வீங்கி இருப்பதும் பார்க்கப்படுகிறது. இதை மருத்துவர்கள் ‘பிக்ங் ஐ’ என கூறுகிறன்றனர்.

மேலும், இந்த செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படம் இந்த அறிகுறியை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என உறுதிப்படுத்துமாம்.

இதற்காக செமிக் ஆர் எப் நிறுவனம், அவர்கள் கண்டுபிடித்த ‘செமிக் ஐ ஸ்கேன்’ செயலியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து எடுக்கப்பட்ட வேறுபட்ட 20 லட்ச பிங்க் நிற மாதிரிகளை கொண்டுள்ளனராம்.

இதுவரை சுமார் 70,000 பேரிடம் இந்தச் செயலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், 95 சதவிகிதம் துல்லியமாக கணிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலி அடுத்த மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உல்ஃகேங் குர்பர் ( Wolfgang Gruber)தெரிவித்துள்ளார்.

Contact Us