தாய் தொடர்பில் 15 வயது மற்றும் 6 வயது மகன்கள் கொடுத்த அதிர்ச்சி புகார்; திடுக்கிட்டுப்போன பொலிஸார்!

ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரியான ராமலிங்கம். இவரது மூத்த மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிக்கு 15 வயதான தீபக் மற்றும் 6 வயதான கிஷாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ராமலிங்கம், இந்துமதி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து ரஞ்சிதாவுடன், இந்துமதியும் சேர்ந்து ஒரே வீட்டில் கணவனுடன் வசித்து வந்தனர். இந்துமதி – ராமலிங்கம் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்துமதியின் தோழி தனலட்சுமி, ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனலட்சுமியும் ரஞ்சிதாவும் சேர்ந்து கொண்டு தங்களை சித்ரவதை செய்வதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ரஞ்சிதாவின் மகன்கள், தங்கள் தாத்தா பாட்டியுடன் சேர்ந்து புகாரளித்துள்ளனர்.

தன்னையும் தனது சகோதரனையும் நரபலி கொடுக்கப் போவதாக இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு பீதியடைந்து தாத்தா வீட்டிற்கு வந்து விட்டதாக சிறுவன் தீபக் தெரிவித்தார். சிறுவர்களின் புகாரை ஈரோடு தாலுகா காவல்நிலையத்திற்கு அனுப்பியுள்ள மாவட்ட எஸ்பி, உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சிறுவர்களின் தந்தை ராமலிங்கம் தான் மதுரையில் இருப்பதாகவும் அதனால் வர முடியாது எனவும் தெரிவித்தது தெரியவந்துள்ளது. அதேபோல் தங்கள் திருவண்ணாமலையில் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது என தனலட்சுமி – ரஞ்சிதா இருவரும் போலீசாரிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களின் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்துவார்களா? உண்மை வெளிவருமா?

Contact Us