யாழில் அநாதரவாக நிறுத்திவைக்கப்பட்ட கார்; ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் இராணுவம்; பெரும் பதற்றம்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் 13.04.2021 நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பளை பொலிசாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.இன்று 14.04.2021காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த காரானது தென்னிலங்கையில் திருட்டு போன காராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இது வரையில் எவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட இல்லை மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us