டேய் சுந்தர்… நீ அந்த பக்கம் போ!”.. செல்லமாக அதட்டிய நட்டு!.. மீண்டும் சீண்டிய சுந்தர்!.. இது சரிபட்டு வராது!.. ரெண்டு பேரும் சேர்ந்து… செம்ம ரகளை!

ஹைதராபாத் – பெங்களூர் அணிகளுக்கு இடையே நடக்கும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்கடன் சுந்தர் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேட்டி அளித்தது வைரலாகி உள்ளது.

ipl srh natarajan rcb washington sundar fun chat in live

இதில் பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டியில் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் நடராஜன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார்.

இதில் தனது காயம் குறித்து பேசிய நடராஜன், எனக்கு தோள் பட்டையில் காயம் ஏற்படவில்லை. எனக்கு காலில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. கால் முட்டியில் பிரச்சனை இருந்தது. ஆனால், இப்போது சரியாகிவிட்டது. கடந்த போட்டியில் பிட்ச் ஸ்லோவாக இருந்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும்படி வார்னர் கூறினார். அதை பின்பற்றினேன். எனக்கு, தெரிந்ததை மட்டும் செய்யும் முடிவில் இருக்கிறேன் என்று நடராஜன் குறிப்பிட்டார்.

இதையடுத்து நடராஜன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்தார். ஆனால், கேமாராவிற்கு பின் நின்று கொண்டு வாஷிங்க்டன் சுந்தர், அவரை கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதனால் நடராஜனும் தமிழ் புத்தாண்டு சொல்ல முடியாமல் சொதப்பினார்.

தொடர்ந்து சுந்தர் நடராஜனை கிண்டல் செய்து கொண்டே இருந்தார். இதையடுத்து, “டேய் சுந்தர் நீ அந்த பக்கம் போ” என்று நடராஜன் குறிப்பிட்டார். ஆனால் சுந்தர் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து சுந்தரும், நடராஜனும் ஒன்றாக சேர்ந்து கேமரா முன் நின்று புத்தாண்டு வாழ்த்து கூறினார்கள்.

தமிழக வீரர்கள் ஒன்றாக சேர்ந்து மற்றவர்களை இப்படி ஜாலியாக கிண்டல் செய்த சம்பவம் வைரலாகி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் ஆடுகிறார்கள். ஹைதராபாத் அணியில் நடராஜன், விஜய் சங்கர் ஆடுகிறார்கள், பெங்களூர் அணியில் வாஷிங்கடன் சுந்தர் ஆடுகிறார்.

Contact Us