ஃபுல் போதைல ‘கர்ணன்’ படத்துக்கு வந்த இளைஞர்கள்…! ‘உள்ளே விட மறுத்ததால்…’ கடுப்பாகி செய்த ‘அதிர்ச்சி’ காரியம்…! பரபரப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

petrol bomb at the cinema theater the movie Karnan

இந்த நிலையில் தியேட்டருக்குள் படம் பார்க்க விடாததால் போதையில் வெறியாகி மீண்டும் தியேட்டருக்கு வந்த இளைஞர்கள், இரவு பதினோரு மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டை வீசியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

petrol bomb at the cinema theater the movie Karnan

மொத்தம் 5 மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதில் அது தரையில் விழுந்து வெடித்தது. இதனால் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டு தீவிரமாக விசாரணை செய்தார்.

petrol bomb at the cinema theater the movie Karnan

மேலும், தியேட்டரில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர். தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இதுசம்பந்தமாக  மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Contact Us