அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணி…’ ‘போலீசிடம் மல்லுக்கட்டிய சிறுமி…’ ‘அறிவுரை கொடுத்த போலீஸ்…’ – என்ன நடந்தது…?

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மாஸ்க் போடுவதற்கான கெடுபிடிக்களும் அதிகரித்துள்ளன.

The girl who argued with the police for her father

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் உள்ளிட்டோருக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், திருச்செந்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் பரவாயில்லை மாஸ்க் இல்லாமல் போனால் அபராதம் தான் என கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு, மூன்று சக்கர வாகனம் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களில் போனாலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் உடனடியாக 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறதாம்.

நான்கு சக்கர வாகனமான காரில் சென்ற ஒருவரை மடக்கி, காரில் இருந்த சிறுமி மாஸ்க் போடத்ததற்கு 200 ரூபாய் அபராதம் விதித்த பெண் போலீஸ் ஒருவர், அவரது தந்தையிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளார். ஆனால் அந்த சிறுமியோ, காரில் செல்லும் நாங்கள் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டு போலீசாரிடம் மல்லுகட்டியுள்ளார்.

பைக், கார் மட்டுமல்லாமல் பேருந்திலும் சோதனை நடத்த போலீசார் சென்றபோது, பையில் இருந்து முகக்கவசம் எடுத்து மாட்டியுள்ளனர். அதோடு அங்கிருந்த ஒரு இளைஞர் ஒருவர் கர்சீப்பை தற்காலிக முகமூடியாக்கினார். இருப்பினும் அவரை அலேக்காக தூக்கிய காவல்துறையினர் ரூ 200 அபராதம் விதித்துள்ளனர்.

டீ கடை முதல் வணிக வளாகங்கள் வரைக்கும் அனைத்து இடங்களிலும் போலீசாரின் தீவிர மாஸ்க் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது.

Contact Us