இறுதிச் சடங்கிற்கு பெரும் இடத்தை சுற்றிவளைத்த பொலிசார்- 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது !

வரும் சனிக்கிழமை பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப் அவர்களின் இறுதிச் சடங்குகள் இடம்பெற உள்ளது. 30 பேர் மட்டுமே அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக மரண வீடுகளில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இதன் அடிப்படையில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அரச குடும்பத்தின் முக்கிய 30 அங்கத்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கிறார்கள்.

இன் நிலையில் மக்கள் எவரும் குறித்த இடத்திற்கு செல்ல முடியாது என்று பொலிசார் அறிவித்துள்ள அதேவேளை. அல்கைடா போன்ற ஜிகாடி இயக்கம் ஒன்று இதனை பாவித்து தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். இதன் காரணாமாக, மரணச் சடங்கு நடக்கும் செயின் ஜோர்ஜஸ் தேவலய வளாகத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது பொலிஸ்.

தீவிரவாதிகள் தாக்கினால் கூட சமாளிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us