ரிப்பேருக்கு வந்த ஐபோனுக்குள் இருந்த துண்டுச்சீட்டு..! Please அதை செய்யாதீங்க’!.. ‘என் மனைவிக்கு மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான்’..

ரிப்பேருக்கு வந்த செல்போனில் ஒரு துண்டுச் சீட்டும், கொஞ்சம் பணம் இருந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man asks repair shop to not fix his phone, hide money inside it

செல்போன் ரிப்பேரை சரி செய்யும் கடைக்கு ஒரு ஐபோன் உடைந்த நிலையில் வந்துள்ளது. அந்த ஐபோனில் ஸ்க்ரீன் பல கீறல்களுடன் மேலிருந்து கீழ் வரை உடைந்திருந்துள்ளது. அதனால் அதை சரி செய்வதற்காக கடைக்காரர் ஐபோனை திறந்துப் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்துள்ளது.

Man asks repair shop to not fix his phone, hide money inside it

அந்த ஐபோனுக்கு உள்ளே ஒரு துண்டுச் சீட்டும், கொஞ்சம் பணமும் வைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும் அந்த சீட்டில் ஏதோ எழுதியிருந்தது. அதில், ‘தயவு செய்து இந்த செல்போனை மட்டும் ரிப்பேர் செய்து கொடுக்கவேண்டாம். என் மனைவி என்னை கொன்றே விடுவாள். இதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி’ என்று எழுதி இருந்துள்ளது.

Man asks repair shop to not fix his phone, hide money inside it

இதைப் பார்த்த ஆச்சரியமடைந்த கடைக்காரர், இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கேர்ள் ஃப்ரண்ட்டை ஏமாற்றும் வாடிக்கையாளர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன்’ என கிண்டலாக சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார்.

Man asks repair shop to not fix his phone, hide money inside it

Contact Us