போற போக்கில் விடுதலையாகப் போகிறார் கொலைகார பொலிஸ்- கார் புகை தாக்கி இறந்தாராம் கறுப்பின நபர் !

 

போற போக்கில் ஜேர்ஜ் பிளையடை கொலை செய்த பொலிஸ் நபரான டெரிக் சுவைன் குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றம் அவரை விட்டும் விடும் போல உள்ளது. காரணம் என்னவென்றால், ஜோர் பிளையட் சுவாசப் பையில் உள்ள கார்பன் மொனோ ஆக்ஸைட். அனைவருக்கும் தெரியும் கழுத்தில் அழுத்தியதால் தான் அவர் இறந்தார் என்று. ஆனால் பொலிஸ் கமிஷனர் என்ன சொல்கிறார் என்றால், ஜோர்ஜ் பிளையடை காருக்கு அருகாமையில் வைத்து கழுத்தில் அழுத்தி கைது செய்தவேளை… காரின் பின் புறம் சைலன்சர்(புகை வெளியிடும் குழாய்)…

அதில் இருந்து வெளியான கார்பன் மொனோக்ஸைட் அதனை சுவாசித்தே பிளையட் இறந்தார் என்று. அதனால் கழுத்தில் அழுத்தி இறந்தது என்று கூறுவது தவறு என்கிறார்கள் பொலிஸ் தரப்பு. இதே நேரம் அமெரிக்காவின் சட்டத்தில் உள்ள Fifth Amendment ( அதாவது 5வது திருத்தச் சட்டத்தை) பாவித்து, எந்த ஒரு கேள்விக்கும் விடைகூறாமல் நீதிமன்றில் அந்த பொலிசாரால் நிற்க்க முடியும். இதன் காரணத்தால் யூரிகள் அவர் விடை சொல்லாமல் நிற்பதை வைத்து குற்றவாளி என்ற தீர்மானத்திற்கு வர முடியாதாம்.

விவாதங்களை கேட்டே முடிவுக்கு வர முடியும். அது போக குறித்த பொலிஸ் எந்த ஒரு கேள்விக்கும் விடை கொடுக்கப் போவது இல்லை. அப்படி என்றால் எப்படி யூரிகள் முடிவை எட்ட முடியும் ? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் கொஞ்சப் பணமும், அதிகாரமும் இருந்தால் போதும். இந்தியாவை விட சட்டத்தை வளைத்து விடுவார்கள். இறுதியாக கொலை செய்த இந்த பொலிஸ் கான்ஸ்ரபிள் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பு வந்தால் கூட ஆச்சரியப்பட தேவை இல்லை.

Contact Us