தொழிலதிபர், அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு… ராதா கணவர் கதறி அழுகிறார் பாருங்கள் !

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. இவருக்கு ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் முதல் கணவரை பிரிந்து சாலிகிராமத்தில் வசித்து இவர் இரண்டாவதாக எண்ணூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவருடன் பழகி திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து ராதாவும், வசந்த ராஜாவும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராதாவின் நடத்தையின் மீது வசந்தராஜா சந்தேகப்பட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், ஏற்கனவே திருமணமான விஷயத்தை மறைத்திவிட்டு தன்னை ஏமாற்றியதாகவும் வசந்த ராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ராதா புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் விசாரித்ததில், வசந்தராஜா ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வருவது தெரிய வந்தது. ஆனால் அந்த விஷயம் ஏற்கனவே ராதாவுக்கு தெரியும் என்று விசாரணையில் கூறிய வசந்த ராஜா கூடுதல் தகவல்களை தெரிவித்தார்.

அதாவது, வசந்தராஜாவுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை தெரிந்துதான் ராதா இவரை திருமணம் செய்துள்ளார். அப்போது, சட்ட ரீதியான விஷயங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வசந்த ராஜாவிடம் ராதா கூறிவிட்டுதான் திருமணம் செய்துள்ளார். ஆனால். கோடம்பாக்கத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள், பழைய நண்பர்கள் என அனைவரிடமும் ராதா தற்போது வரை தொடர்பில் உள்ளதாகவும், அதை கண்டித்ததால் ராதா என் மீது பொய் புகார் கொடுத்துவிட்டதாகவும் வசந்தராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ராதாவும், குன்றத்தூர் ரவுடி வைரமும் பேசிக்கொண்ட ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ரவுடி வைரம் ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அதற்கு அசராமல் ராதா பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Contact Us