சீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை

சீனாவிலிருக்கும் சில மாகாணங்களில் இறந்தவர்களை புதைக்க தடை உள்ளது. அதையும் மீறி இறந்தவரின் விருப்பப்படியே ஆவரை புதைக்க வேண்டும் என்பதற்காக, டவுன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடுள்ள ஒருவர், கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்தவருக்கு பதிலாக அவர் எரியூட்டப்பட்டு இருக்கிறார் என்ற சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

தென் கிழக்கு சீனாவின் ஷான்வீ பகுதியைச் சேர்ந்த ஒருவர் புற்றுநோயால் இறப்பதற்கு முன், தன்னை பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். சீனாவின் சில பகுதிகளில் இறந்தவர்களை புதைப்பதற்கு தடை உள்ளது. எனவே இறந்தவருக்கு பதிலாக ஒரு பிணத்தை எரித்து விட்டு, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது குடும்பம் ஒரு நபருக்கு பணம் கொடுத்தது.

குடும்பத்தினர் பணம் கொடுத்த நபர் ஒரு பிணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, அவரே ஒருவரை கொலை செய்து, அந்த உடலை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கிறார். என்ன கொடுமை கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு கொலையா ?

Contact Us