மயாணங்களில் பிணத்தை புதைக்கவே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது !

கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் தேட வேண்டியிருக்கிறது; உயிரிழந்து விட்டால் உடல்களைப் பெற பிணவறைகளிலும், பின்னர் எரிப்பதற்கு மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது அமெரிக்காவோ பிரேசிலோ அல்ல, இந்தியா .. ஆம் இந்தியாவே தான். கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு விற்று காசு பார்க்கும் மோடி அரசு. தன் சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கவில்லை என்பது மிகவும் கேவலமான ஒரு வெட்க்கப்படவேண்டிய விடையம்.

உலகில் எந்த ஒரு நாடும் செய்யாத ஈனத்தனமான வேலை மோடி செய்துள்ளார். லட்சக் கணக்கில் இந்தியாவில் தயாராண தடுப்பு ஊசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்து. தனது நாடு பெரும் வளர்சிகண்ட நாடு என காட்டிக் கொண்டார் மோடி. அதில் பெருமை தேடிக்கொண்டார். ஆனால் இன்று லட்சக் கணக்கில் கொரோனா நோய் பரவும், மற்றும் உலகிலேயே தொற்று அதிகம் உள்ள நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் எழிய மக்கள் அன்றாடம் இறக்கிறார்கள். செல்வந்தர்கள் அரச ஊழியர்கள், நடுத்தர வர்கத்தினர், அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. ஆனால் ஏழை எழிய மக்களுக்கு அது எட்டவில்லை.

Contact Us