அமெரிக்க தளம் மீதே ட்ரோன் தாக்குதல்- யாருப்பா அந்த சூத்திரதாரி ? எமனுக்கே கில்மாவா ?

உலகில் உள்ள பல நாடுகளில் தனது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா தான், ட்ரோன் தாக்குதலின் தந்தை என்று கூறப்படும் நிலையில். அமெரிக்காவுக்கே கில்மா கொடுத்து, அவர்கள் தளம் மீதே ட்ரோன் மூலம் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பான விடையம் தான்.

ஈராக்கில் உள்ள வடக்கு பகுதியில் குர்திஸ்தான் ஆட்சியின் கீழ் உள்ள, எர்-பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க விமானப்படை தனது தளமாக பயன்படுத்தி வருகிறது. இன் நிலையில் நேற்றைய தினம், இரவு இங்கே ட்ரோன் விமானம் ஒன்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் தீவிரவாதிகள். அமெரிக்க படைகளை குறிவைத்து, வழமையாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில். மாறாக ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட விடையம் பெரும் கவனத்தை ஈர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

Contact Us