பணத்திற்காக பெற்ற தாயை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தமிழ் இளைஞன்!

பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் – சோலையம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு விக்ரம், மலர்கொடி. புஷ்பா, செல்வி மற்றும் செல்வராஜ் என 5 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கைலாசம், விக்ரம் ஆகிய இருவரும் தற்போது உயிருடன் இல்லை. புஷ்பா, செல்வி, செல்வராஜ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் சோலையம்மாள் அதே ஊரைச் சேர்ந்த மணியரசன் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இவர்களின் மகள்களில் ஒருவரான மலர்கொடி திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அரசு பணியில் இருந்துள்ளார்.

பணியில் இருக்கும் பொழுது அவர் உடல் நலக் குறைவினால் இறந்து போனதால் அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பணப்பலன்களை யார் பெற்றுக் கொள்வது என்பதில் செல்வராஜ் – சோலையம்மாளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்படி மலர்கொடியின் பணப்பலன்கள் அனைத்தும் சோலையம்மாளுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த பணப்பலன்களை பெற்றுக்கொண்ட சோலையம்மாள் அதனை வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அந்த பணத்தில் தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த செல்வராஜ் 15 ஆம் தேதி அன்று மதியம் தனது தாய் சோலையம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு சொலையம்மாள் மறுக்கவே தகராறு முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தான் ஏற்கனவே எடுத்துச்சென்ற கத்தியால் சோலையம்மால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த சோலையம்மாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கிருந்து செல்வராஜை தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் திருநகர் பகுதியில் பதுங்கியிருந்த செல்வராஜை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் அருகே பெற்ற தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Contact Us