புலம்பெயர் தமிழர்களுக்கும் அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய செய்தி; இனி கோத்தா அவ்வளவுதான்!

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள்.

இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

அதேவேளை இருதரப்பினரதும் அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களையும் பெரிதும் வரவேற்கின்றோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us