நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு’… கொரோனா ‘தடுப்பூசி காரணமா’?

தமிழ்த் திரைப்பட நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்குத் தடுப்பூசி காரணம் எனப் பரவும் தகவலுக்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று நெஞ்சுவலி காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தின் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவரை கண்காணித்து வருவதாக அவருக்குச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணி அளவில் அவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு எக்மோ கருவி பொருத்தி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் அவரின் உடல்நலக் குறைவுக்குத் தடுப்பூசி காரணம் அல்ல என மருத்துவமனை தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

Contact Us