துப்பாக்கியை கீழே போட்ட 3 செக்கனில் 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற பொலிசார்- கலவரம் வெடித்தது !

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆயுதம் வைத்திருந்ததாக கூறி போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் உண்மையில் அச்சிறுவன் அயுதத்தை எடுத்து கீழே போட்டு 3 செக்கனுக்கு பின்னர் தான் பொலிசார் அவனைச் சுட்டுள்ளார்கள் என்பது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளதால் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே டான்ட் எனும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே அச்சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள 13 வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி சிகாகோ போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

9 நிமிடம் உள்ள இந்த வீடியோ காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு காவல் அதிகாரி ஒருவர் 13 வயதுடைய ஆடம் டோலிடோ எனும் பெயருடைய சிறுவனை மடக்கி, அவனது கைகளை உயர்த்தச் சொல்லி. அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை நிலத்தில் போட்ட பின்னர், துப்பாக்கியால் சுட்டுள்ளர். பின் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனால் பெரும் கவலரம் மூண்டுள்ளது.

 

Contact Us