எப்பா மோகன், 100 கோடி ரூபாய் செலவானாலும் பரவால்ல, நயன்தாராவ ஜோடியாக்கிரு.. கட்டளை போட்ட 65 வயது நடிகர்

நயன்தாராவுக்கு மட்டும் வயது ஏற ஏற பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பட வாய்ப்புகளை விட அவரது பெயரும் புகழும் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.

ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகையாக அரசியலுக்கு வரும் தகுதி நயன்தாராவுக்கு மட்டும் தான் உள்ளது என இப்போதே பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நயன்தாரா தற்போது தன்னுடைய காதல் மற்றும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார்.

தற்போது கமர்ஷியல் படங்களிலும் சரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் சரி அனைத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார். அந்த வகையில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது.

தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவி அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம். தெலுங்கில் மோகன் ராஜா இயக்கிவுள்ள இந்த படத்தில் எப்படியாவது நயன்தாராவை ஜோடியாக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் சிரஞ்சீவி.  இதற்காக நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். நயன்தாராவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மார்க்கெட் என தற்போது கோலிவுட்டில் உள்ள மற்ற நடிகைகளும் பொறாமையில் இருக்கிறார்களாம்.

 

Contact Us