லண்டனில் 77 பேருக்கு இந்திய டபுள் மியூட்டன் கொரோனா – இது தடுப்பூசியையே ஏமாற்ற வல்லதா ?

லண்டனில் 73 பேருக்கும் வேல்ஸ்சில் 4 பேருக்கு என மொத்தமாக 77 பேருக்கு இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை டபுள் மியூட்டன் அதாவது இரட்டிப்பு பலம் கொண்ட கொரோனா வைரஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். இது தடுப்பூசி போட்ட நபர்களை தாக்கி கொல்ல வல்லது என்று மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில். இதனை அவர்கள் இதுவரை உறுதிசெய்யவில்லை. குறித்த 77 நபர்களையும் தனிமைப்படுத்தி மிகவும் ஜாக்கிரதையாக கண்காணித்து வருகிறார்கள். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  Source : First cases of  double mutant Covid from India found in UK , 77 people are affected 

இன் நிலையில் பிரித்தானியர்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறித்த உரு மாறிய கொரோனா வைரஸ் தொடர்பான ஆராட்சிகள் இடம்பெற்று வரும் நிலையில். இன்னும் சில தினங்களில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

Contact Us