பணம் இல்லாமல் தவித்த நடிகர், அப்படியே லட்சக்கணக்கில் தூக்கி கொடுத்த விவேக்- ஒரு சுவாரஸ்ய சம்பவம்!

இன்று அதிகாலை உயிரிழந்த நடிகர் விவேக் அவர்களின் உடலுக்கு பொது மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த துயரத்தை அவரது குடும்பத்தார் எப்படி கடக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் விவேக் அவர்கள் நடிகர் குமரிமுத்துவிற்கு செய்த உதவி பற்றி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் குமரிமுத்து தனது மகள் திருமணத்திற்க பணம் இல்லாமல் தவித்துள்ளார். அப்போது விவேக், குமரிமுத்து என சில கலைஞர்கள் ஒரு நாடகத்திற்கு சென்றுள்ளார்.

குமரிமுத்துவிற்கு ரூ. 50 ஆயிரம், விவேகிற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. தனது பணத்தை வாங்கிய விவேக் அதேவேகத்தில் குமரிமுத்துவிடம் ரூ. 2 லட்சத்தையும் கொடுத்துள்ளார்.

Contact Us