தனியாக இருந்து கண்ணீர் விட்டு அழுத மகாராணி: என்ன செய்வது எல்லாம் காலம் செய்யும் கோலம் !

இன்றைய தினம் பிரித்தானிய மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேவாலயத்தினுள் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இன் நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவர் அருகில் யாரும் இருக்கவில்லை. தனியாக தனக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் அமர்ந்து நடைபெற்ற இறுதிக் கிரிகைகளை அவர் பார்த்துக் கொண்டு இருந்தவேளை. தானாகவே அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஒழுகியது.

இது நாள்வரை தன்னுடன் வாழ்ந்து வந்த கணவர் இன்று தன் அருகே இல்லை என்ற பெரும் சோகத்தில் அவர் காணப்பட்டார். அவரை என்றுமே நாம் இப்படி பார்கவில்லை என்று மூத்த BBC ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஆடவில்லை என்றாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதனைப் போல வழிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் அவர் இருந்த காட்சிகள் பிரித்தானிய மக்களை மட்டும் அல்ல உலகையே உலுப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஆறுதல் சொல்லக் கூட அருகில் யாரும் இல்லாத நிலையில் அவர் இருந்தது தான் பலரை கவலை கொள்ள வைத்துள்ளது.

Contact Us