இரு சமூக மக்களிடையே மோதல் நடந்ததில் 16 பேர் பலி!

தெற்கு சூடான் நாட்டில் பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் ஜாங்லெய், வாரப் மற்றும் லேக்ஸ் ஆகிய மாநிலங்களில் சமூக மோதல்கள் நடந்து வருகின்றன.

இவற்றில், கால்நடைகளை இழுத்து செல்லுதல், குழந்தை கடத்தல் மற்றும் பழிக்கு பழியாக படுகொலை ஆகியவை அதிகரிக்க தொடங்கின. இந்த நிலையில், அந்நாட்டின் லேக்ஸ் ஸ்டேட் பகுதியில் மெனியாங்கிரெல் கால்நடை முகாமில் உள்ள கோனி மற்றும் துயிக் சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட இந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர் என கலாசார, இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான மந்திரி வில்லியம் கோஜி இன்று கூறியுள்ளார்.

எனினும், போலீசாரிடம் இருந்து இன்னும் கூடுதல் தகவல்கள் வரவேண்டி உள்ளன. அதற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். சம்பவ பகுதிக்கு பாதுகாப்பு படைகளை அனுப்பியிருக்கிறோம். அவர்கள் வன்முறையை கட்டுப்படுத்தி மீண்டும் அமைதி திரும்பும் பணியை மேற்கொள்வார்கள் என்றும் கோஜி கூறியுள்ளார்.

Contact Us