தெற்கில் சரியும் கோட்டாவின் செல்வாக்கு- புலிகள் மீள் உருவாக்கம் என்ற நாடகத்தை கையில் எடுக்கிறார் ?

தென்னிலங்கையில் சஜித் பிரேமதாச போன்றவர்கள், சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இலங்கை பாதாளம் நோக்கிச் செல்வதை அவர்கள் சிங்கள மக்களுக்கு புரியவைக்க முனைந்து வரும் நிலையில். யாழ்பாணத்தில், கிளிநொச்சியில் புலிகள் மீண்டும் உருவாகிறார்கள். நான் அதனை தடுத்து நிறுத்துகிறேன் என்று சிங்கள மக்களுக்கு காட்ட, கோட்டபாய அரசு பெரும் முயற்ச்சிகளை எடுத்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ற செய்திகள் நேற்றைய தினம்(18) வெளியாகி இருந்தது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், நேற்று முன் (17) சனிக்கிழமை அதிகாலை இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் கைது செய்யப்பட்டனர். ஒரு புறம் அரசியல் பழிவாங்கல் நடக்க.

மறு புறம் இவ்வாறு கதைகளை பரப்பி, சிங்கள ஊடகங்களில் இதனை பெரிதாக போட்டுக் காட்டி மக்களை திசை திருப்பி வருகிறார் கோட்டபாய. ஆனால் எத்தனை நாட்களுக்கு இது நடக்கும் என்பது தேன் பெரும் கேள்விக் குறி.

Contact Us