50 நாட்களில் கமலா ஹாரிஸாகிய நீங்கள் இறக்கப் போகிறீர்கள் ! மிரட்டியவர் யார் என்று தெரியுமா ?

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்தததாக புளோரிடாவை சேர்ந்த தாதி நிவியன் பெட்டிட் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புளோரிடாவை சேர்ந்த தாதி நிவியன் பெட்டிட் சிறையில் உள்ள தனது கணவருக்கு ஜிபே மூலம் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

சிறையில் உள்ள கைதிகளை அவரது குடும்பத்தினருடன் இணைத்து ஜிபே என்ற கணினி பயன்பாடு மூலம் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கப்படுகின்றது. நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கலைஞருக்கு அனுப்பிய வீடியோவில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு வீடியோவில் கமலா ஹாரிஸ் நீங்கள் இறக்க போகிறீர்கள். உங்கள் நாட்கள ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மற்றொரு வீடியோவில், நான் துப்பாக்கி வாங்க செல்கிறேன். நான் கடவுளிடம் சத்தியம் செய்கிறேன். இன்றிலிருந்து 50 நாட்களில் கமலா ஹாரிஸாகிய நீங்கள் இறக்கப் போகிறீர்கள்.

இந்த நாளை குறித்துவைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி வெளியிடப்பட்டுள்ளது . இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்தததாக தாதி நிவியன் பெட்டிட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Contact Us